சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார்? தோனி மனதில் இவரா?

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது முதல் தற்போது வரை ஒரு அணியின் கேப்டனாக ஒருவரே இருப்பது சிஎஸ்கே அணி மட்டுமே. தல தோனி தலைமையில் சிஎஸ்கே அணி இன்னும் இரண்டு ஆண்டுகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

ஆனால் அதே நேரத்தில் தோனிக்கு பின்னர் சிஎஸ்கே அணியை வழிநடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது குறித்து அவர்கள் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான பிராவோ சமீபத்தில் பேட்டியளித்த போது ’தோனியுடன் நான் சில ஆண்டுகள் நெருக்கமாக பழகியதில் அவர் மனதில் சிஎஸ்கே அணியின் அடுத்த வாரிசு குறித்த திட்டங்களை ஓரளவுக்கு யூகித்து வைத்துள்ளேன் 

சுரேஷ் ரெய்னா அல்லது ஒரு இளைய வீரர் தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதே தோனியின் எண்ணமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார் 

இருப்பினும் தோனியின் ஓய்வுக்குப் பின்னர் சிஎஸ்கே அணியை வழிநடத்த போகும் கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது பதில் இல்லாமல் உள்ளது. இது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

இருப்பினும் 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் தோனியே கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web