2ஆம் டெஸ்ட்டில் கேப்டன் யார்? நடராஜன் மிஸ்ஸிங், அணியின் முழு விபரம்

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து நாளை 2-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான அணியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 

இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி இந்தியா திரும்பி விட்டதை அடுத்து அணியின் கேப்டனாக ரகானே தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புஜாராவும் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

ind vs aus

மேலும் அணியில் மயங்க் அகர்வால், கில், விஹாரி, ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் களமிறங்கிய நடராஜனுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அணியில் இணைக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web