ஐபிஎல் போட்டியின் அட்டவணை ரிலீஸ் எப்போது? புதிய தகவல்

2020ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இன்னும் இந்த போட்டியின் அட்டவணை வெளியாகவில்லை. ஐபிஎல் விதிமுறைப்படி நடப்பு சாம்பியனும், 2-ம் இடம் பிடித்த அணியும் முதல் ஆட்டத்தில் விளையாட வேண்டும். அப்படியென்றால் மும்பை மற்றும் சென்னை அணிதான் முதல் போட்டியில் மோதும்

ஆனால் சென்னை அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் சென்னை அணிக்கான போட்டிகள் ஒரு வாரம் கழித்து தொடங்கும் வகையில் அட்டவனை தயாரிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடும் அணி எது? என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை சனிக்கிழமை வெளியிடப்படும் என்றும், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் முதல் ஆட்டத்தில் விளையாடும் அணி எது என்பது அன்றைய தினம் தெரியும் என்றும் கூறப்படுகிறது

முதல் போட்டியே அதிரடியாக இருக்க வேண்டும் என்பதால் மும்பை அணியுடன் விளையாடும் அணியை ஐபிஎல் நிர்வாகம் மிக கவனமாக தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web