மீண்டும் ஐபிஎல் போட்டி தொடங்குவது எப்போது? பிசிசிஐ அறிவிப்பு

 
ipl

14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த போட்டிகள் முதல் சுற்று பிரச்சனையின்றி நடந்தது. ஆனால் மே மாதம் இரண்டாம் தேதி பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று முடிந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது

கொல்கத்தா அணியின் வீரர்கள் சந்தீப் வாரியர், சக்ரவர்த்தி, டெல்லி கேபிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா, சன்ரைசர்ஸ் அணி வீரர் விருதிமான் சாஹா, சிஎஸ்கே பயிற்சியாளர் பாலாஜி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்தே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில் இதுவரை 29 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ள நிலையில் மீதி போட்டிகள் எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வந்தது. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்பதை அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று ஐபிஎல் போட்டி நடத்துவதற்கான ஆலோசனை கூடியது

பிசிசிஐ நடத்திய இந்த ஆலோசனையில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் போட்டியை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது

From around the web