என்ன ஆச்சு சஞ்சு சாம்சனுக்கு? ராஜஸ்தான் அணி தொடர் தோல்வி

 

நேற்று ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

ராஜஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் முதல் இரண்டு போட்டிகளில் அற்புதமாக விளையாடிய நிலையில் அதன் பின்னர் நான்கு போட்டிகளில் திணறி வருவதால் ராஜஸ்தான் அணி அதலபாதாளத்தில் புள்ளி பட்டியலில் உள்ளது

ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியை வென்றது. அதற்கு முக்கிய காரணம் சஞ்சு சாம்சன் அடித்த 74 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் பஞ்சாப் அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் அடித்த 82 ரன்கள் அந்த அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

 ஆனால் இந்த இரண்டு போட்டிகளை தவிர சஞ்சு சாம்சன் அதன் பின்னர் சோபிக்கவில்லை கொல்கத்தா அணிக்கு எதிராக 8 ரன்களும், பெங்களூர் அணிக்கு எதிராக 4 ரன்களும், மும்பை அணிக்கு எதிராக டக் அவுட்டும், நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிராக 5 ரன்களும், மட்டுமே எடுத்துள்ளார் 

கடந்த நான்கு போட்டிகளில்  சஞ்சு சாம்சனின் மோசமான பேட்டிங்கும், ராஜஸ்தான் அணியும் தோல்வியும் ஒருசேர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த நான்கு போட்டிகளில் எடுத்த மொத்த ரன்களே 17 என்பது குறிப்பிடத்தக்கது 

வரும் போட்டிகளிலாவது சஞ்சு சாம்சன் மீண்டு வருவாரா? ராஜஸ்தான் அணியை கரை சேர்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web