என்ன இருந்தாலும் தல தலதான்: தோனி விக்கெட்டை வீழ்த்திய வருன் சக்கரவர்த்தி போட்டி

 

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் தோனியின் விக்கெட்டை வீழ்த்திய கொல்கத்தா அணியை சேர்ந்த இளம் வீரர் வருண் சக்கரவர்த்தி

இவர் தோனியின் பல போட்டிகளை பார்ப்பதற்காகவே கொல்கத்தாவில் இருந்து சென்னை வரை வந்துள்ளார் என்று நேற்றைய போட்டி முடிந்ததும் பேட்டி அளித்துள்ளார். வருண் சக்கரவர்த்தி மற்றும் ராகுல் த்ரிப்பாட்டி ஆகிய இருவரும் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

அந்த வீடியோவில் தோனிக்கு பந்து வீசும்போது பயமாக இருந்ததா என ராகுல் கேட்க அதற்கு வருண் சக்கரவர்த்தி ’நிச்சயமாக அவருக்கு பந்துவீசியபோது பயமாக இருந்தேன் ஆனால் அவரது விக்கெட்டை வீழ்த்தியதும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று கூறியுள்ளார் 

சின்ன வயதில் தோனியை பார்ப்பதற்காக அடிக்கடி சென்னை மாகாணத்தில் வருவேன் என்றும்  என்ன தான் இருந்தாலும் தல தல தான் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தோனியுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டதையும் அவர் அந்த வீடியோவில் பகிர்ந்துகொள்கிறார்

From around the web