பிளே ஆஃப் செய்ய ராஜஸ்தான், கொல்கத்தா என்ன செய்ய வேண்டும்?

 

இன்று நடைபெற்று வரும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்ஹான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அதிக ரன்ரேட் வெற்றி பெற்றால் மட்டுமே பயம் தரும் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் மோர்கன் 35 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகள் அடங்கும்

இந்த நிலையில் ராஜஸ்தான் அணி 192 என்ற இலக்கை 14 ஓவர்களில் அடித்தால் மட்டுமே முதல் நான்கு இடங்களில் ஒன்றை பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதேபோல் கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். இரண்டுமே நடைபெறவில்லை என்றால் இரண்டு அணிகளுமே வெளியில் செல்ல தான் அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே 192 என்ற இலக்கை 14 ஓவர்களில் ராஜஸ்தான் எட்டுமா? அல்லது 80 ரன்கள் வித்தியாசத்தில் கொலத்தா, ராஜஸ்தானை வீழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web