சென்னை அணி வீரர்கள் என்ன அரசாங்க ஊழியர்களா? சேவாக் கண்டனம்!

 

நேற்று முன்தினம் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது. கையில் கிடைத்த வெற்றியை நழுவ விட்ட சென்னை அணிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக கேதார் ஜாதவ் மற்றும் தோனியின் ஆமை வேக ஆட்டத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் 

அதுமட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சென்னை அணிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சென்னை அணி வீரர்களுக்கு கடுமையான கண்டனத்தை தனது சமூக வலைதளப் அவர் பதிவு செய்துள்ளார் 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சிலர் அரசாங்க வேலையில் இருப்பது போல நினைத்துக் கொண்டிருக்கின்றார் என்று அவர் கேலியும் கிண்டலும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே தோனி குறித்து அவ்வபோது கடுமையாக விமர்சனம் செய்து வரும் சேவாக், தற்போது சென்னை அணியின் தோல்வியை கேலியும் கிண்டலும் செய்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web