மனைவி அனுஷ்காவுக்கு என்ன குழந்தை? வைரலாகும் விராத் கோஹ்லியின் இன்ஸ்டா பதிவு!

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருக்கிறார் என்பது தெரிந்தே. அவருக்கு ஜனவரி 15ஆம் தேதிக்குள் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் ஏற்கனவே கணித்திருந்தனர். 

அந்த வகையில் கிரிக்கெட் போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்று இருந்த விராட் கோலி மனைவிக்கு குழந்தை பிறக்கும் போது அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியின் விளையாடாமல் நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

virat anushka

இந்த நிலையில் சற்று முன்னர் அனுஷ்காவுக்கு பிரசவ வலி வந்ததாகவும் அதனை அடுத்து அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை விராத் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் 

தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அனுஷ்காவும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள் என்றும் குழந்தைக்கு அனைவருடைய ஆசியும் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கும் தனது மனைவி மற்றும் குழந்தைக்கும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார் 

விராத் கோலியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web