பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அசத்தல்: வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மான்செஸ்டர் நகரில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. போப் 91 ரன்களும் பட்லர் 67 ரன்களும் பிராடு 62 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் நேற்று தொடங்கிய நிலையில் அந்த அணி 47.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து
 

பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அசத்தல்: வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மான்செஸ்டர் நகரில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. போப் 91 ரன்களும் பட்லர் 67 ரன்களும் பிராடு 62 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் நேற்று தொடங்கிய நிலையில் அந்த அணி 47.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. இதனால் இங்கிலாந்து அணி தற்போது 232 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மே.இ.தீவுகள் அணியின் மீதமுள்ள 4 விக்கெட்களையும் இன்னும் ஒருசில ரன்களுக்குள் இங்கிலாந்து அணி வீழ்த்தி விட்டால் சுமார் 200 ரன்கள் முன்னிலையில் இருக்கும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் இரண்டு நாள் வீதம் உள்ளதால் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 369/10

போப்: 91
பட்லர்: 67
பிராடு: 62

மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 137/6

பிளாக்வுட்: 26
ஹோல்டர்: 24
ஹோப்: 17

From around the web