குடும்ப உறுப்பினர் மறைந்த சோகத்திலும் விளையாடிய வாட்சன்!


 

 

நேற்று முன்தினம் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் வாட்சன் தனது குடும்பத்தில் ஒருவர் மறைந்த சோகத்தையும் மறைத்துக் கொண்டு விளையாடிய தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நேற்று முன்தினம் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்னர் வாட்சனின் பாட்டி இறந்து விட்டதாக அவருக்கு தகவல் வந்தது. இருப்பினும் அவர் தனது சொந்த நாட்டிற்கு செல்லாமல் அணியின் வெற்றியே முக்கியம் என்று அவர் களமிறங்கினார்

தனது குடும்பத்தின் சோகத்தை மனதில் வைத்துப் பூட்டிக் கொண்டு அவர் அணிக்காக விளையாடினார். அவர் அன்றைய போட்டியில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்றாலும் அவரது அர்ப்பணிப்பு திறனுள்ள செய்கையால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 

பொதுவாக குடும்பத்தில் உள்ளவர்கள் மரணமடைந்தால் வீரர்கள் உடனே தங்களது சொந்த நாட்டிற்கு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அணியின் வெற்றிதான்  முக்கியம் என்பதற்காக தொடர்ந்து அணியில் விளையாடுவேன் என்றும் தொடர்ந்து ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தான் சொந்த நாட்டுக்கு செல்வேன் என்றும் வாட்சன் கூறியுள்ளார். மேலும் தனது குடும்பத்தினருக்கு அவர் தனது டுவிட்டரில் மூலமே ஆறுதல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வாட்சன், ஐபிஎல், சென்னை, டெல்லி, பாட்டி,

From around the web