கிறிஸ் கெய்ல் பாணியில் வார்னர்: டெல்லி அதிர்ச்சி

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஹைதராபாத் அணிக்கு இந்த போட்டி வாழ்வா சாவா போட்டி ஆகும் 

இந்த போட்டியில் ஐதராபாத் அணி நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது அணியின் நிலைமையை புரிந்துகொண்ட கேப்டன் டேவிட் வார்னர் இன்று பேட்டிங் செய்ய களமிறங்கியதில் இருந்து அதிரடியாக விளையாடி வருகிறார்

டேவிட் வார்னர் இதுவரை 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து உள்ளார் என்பதும் அதில் 7 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தது போல் அதே பாணியை தற்போது டேவிட் வார்னர் கையில் எடுத்து உள்ளார் 

சஹாவும் டேவிட் வார்னருக்கு இணையாக விளையாடி 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து உள்ளார் என்பதும் ஐதராபாத் அணி சற்று முன் வரை 8 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

டேவிட் வார்னர் மற்றும் சஹா ஜோடியை பிரிக்க முடியாமல் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர்

From around the web