பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா: தொடரை வெல்வது யார்?

தென்னாபிரிக்கா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்றுள்ள நிலையில் இன்று தொடரை வெல்லும் அணி எது? என்பதை முடிவு செய்யும் 5வது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இன்று மாலை கேப்டவுனில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி கேப்டன் டூ பிளஸ்சிஸ் தலைமையில் களமிறங்க உள்ளது. இந்த அணியில் ஆம்லா, ஹெண்ட்ரிக்ஸ், மில்லர் போன்ற முன்னணி
 

பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா: தொடரை வெல்வது யார்?

தென்னாபிரிக்கா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்றுள்ள நிலையில் இன்று தொடரை வெல்லும் அணி எது? என்பதை முடிவு செய்யும் 5வது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

இன்று மாலை கேப்டவுனில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி கேப்டன் டூ பிளஸ்சிஸ் தலைமையில் களமிறங்க உள்ளது. இந்த அணியில் ஆம்லா, ஹெண்ட்ரிக்ஸ், மில்லர் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்களும், இம்ரான் தாஹிர், பாட்டர்சன், ஆகிய முன்னணி பந்துவீச்சாளர்களும், டீ காக் என்ற விக்கெட் கீப்பரும் உள்ளனர்.

அதேபோல் பாகிஸ்தான் அணி சர்ஃபஸ் அகமது தலைமையில் பாபர் அஜாம், ஃபாகர் ஜமான், இமாம் உல் ஹக் ஆகிய பேட்ஸ்மேன்களும், ஹசன் அலி, முகமது அமிர் இமாத் வாசிம் ஆகிய முன்னணி பந்துவீச்சாளர்களும் உள்ளனர். இந்த போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது

From around the web