டேவிட் வார்னர் மகளுக்கு விராத் கோஹ்லி கொடுத்த பரிசு: வைரல் புகைப்படம்!

 

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடியது என்பதும் டீ20 மற்றும் டெஸ்ட் தொடர்களை வென்றது என்பதும் தெரிந்ததே 

வெற்றியுடன் திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்திய குடியரசு தலைவர், பிரதமர் உள்பட அனைத்து பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ 5 கோடி பரிசு அளித்து பிசிசிஐ இன்ப அதிர்ச்சி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது 

warner

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராத் கோலிக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை கூறியுள்ளார் 

அதில் இந்திய தொடரில் நாங்கள் தோல்வி அடைந்தாலும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி எனது மகளுக்கு கொடுத்த மறக்க முடியாத பரிசை நான் ஞாபகம் வைத்திருக்கிறேன். எனது மகள் இண்டி அந்த பரிசை மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுள்ளார் என கூறியுள்ளார்.

விராட் கோலி தனது ஜெர்சியை டேவிட் வார்னரின் மகளுக்கு அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலியின் ஜெர்சியை அணிந்து டேவிட் வார்னரின் மகள் கொடுத்த போஸ் குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வார்னர் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web