2வது ஓவரிலேயே விராத் கோஹ்லி அவுட்: பெங்களூருக்கு சிக்கலா?

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானத்ததை அடுத்து பெங்களூர் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரராக விராத் கோஹ்லி மற்றும் படிக்கல் களமிறங்கி நிலையில் முதல் ஓவரில் 5 ரன்கள் எடுத்த பெங்களூர் அணி, இரண்டாவது ஓவரில் விராத் கோலியின் விக்கெட்டை இழந்தது. கோஸ்வாமியின் பந்துவீச்சில் விராட் கோலி போல்டானது பெங்களூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது 

இந்த போட்டியில் வென்றே வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள நிலையில் விராத் கோஹ்லியின் விக்கெட் விழுந்திருப்பது பெங்களூரு அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் பெங்களூர் அணி வலுவான பேட்ஸ்மேன்களை கொண்டிருப்பதால் அந்த அணியின் ரசிகர்கள் சற்று நம்பிக்கையுடன் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது 

ஆனால் அதே நேரத்தில் ஐதராபாத் அணியின் ரஷீத் கான், ஹோல்டர், நதீப், சந்தீப் சர்மா, நடராஜன் ஆகியோர்களின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் என்பதால் பெங்களூரு அணிக்கு சிக்கல் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web