72 ரன்களில் விராத் கோஹ்லி அவுட்: கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது

 

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் சற்று முன்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 72 ரன்களுக்கு அவுட்டாகியதை அடுத்து இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் குவித்தது. பின்னர் 2-வது இன்னிங்சில் 178 ரன்களுக்கு அஸ்வினின் சுழலில் சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது 

india vs england

இந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்கள் மட்டும் எடுத்திருந்த நிலையில் 420 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வந்தது. இந்த நிலையில் சற்று முன் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளதால் இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது 

இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி நிலைத்து நின்று விளையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் 72 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதனை அடுத்து ஒரு சில நாட்களிலேயே நதீம் அவுட்டானதை அடுத்து தற்போது இந்திய அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web