விவசாயிகளின் போராட்டம் குறித்து விராத் கோஹ்லி கருத்து!

 

விவசாயிகள் போராட்டம் கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எந்தவித கருத்தையும் இதுவரை தெரிவிக்காத சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் திடீரென ரிஹானா பதிவு செய்த டுவிட்டிற்கு பின்னர் பொங்கி எழ ஆரம்பித்துள்ளனர்

நேற்று தனது டுவிட்டரில் விவசாயிகள் போராட்டம் குறித்து நாம் ஏன் பேசாமல் இருக்கிறோம் என்று கேள்வியை ரிஹானா எழுப்பிய உடன் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பலர் தங்களது கருத்துக்களை பதிலடியாக நடிகை ரிஹானாவுக்கு கொடுத்து வருகின்றனர்.

virat

ஒரு படி மேலே சென்று நடிகை கங்கனா ரனாவத் ரிஹானாவை முட்டாள் என்று கூறியதையும் பார்த்தோம்.இந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் இணைந்துள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியபோது ’கருத்து வேறுபாடுகள் அதிகம் உள்ள இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். விவசாயிகள் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அமைதியை கொண்டுவருவதற்கும் ஒன்றாக முன்னேறுவதற்கும் அனைத்து தரப்பினருக்கும் இடையில் ஒரு இணக்கமான தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார் 

ரிஹானாவின் டுவிட்டை அடுத்தே பிசிசிஐ நிர்ப்பந்தம் காரணமாக கிரிக்கெட் பிரபலங்கள் டுவிட்டுக்களை பதிவு செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது

From around the web