தோல்வி அடைந்தாலும் சாதனை செய்த விராத் கோஹ்லி!

 

இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது தெரிந்ததே 

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 145 ரன்கள் எடுத்தது என்பதும், அதன்பின்னர் சிஎஸ்கே அணி 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று பெங்களூரு அணி பேட்டிங் செய்தபோது விராட் கோலி அடித்த ஒரு இமாலய சிக்சர் அவரது ஐபிஎல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஒரு சிக்ஸராக மாறியது. ஆம், இந்த சிக்ஸர் விராத் கோஹ்லியின் ஐபிஎல் போட்டியில் 200வது சிக்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது 

இதற்கு முன்னர் ரோகித் சர்மா 209 சிக்ஸர்களும், தோனி 216 சிக்ஸர்களும், டிவில்லியர்ஸ் 231 சிக்ஸர்களும் மற்றும் கிறிஸ் கெய்ல் 336 சிக்ஸர்களும் அடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web