விராத் அபார சதம்: புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பெங்களூரு

 

இன்று நடைபெற்ற 15வது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், சொதப்பலான ஆட்டத்தால் 6 விக்கெட்டுக்களை இழந்து 154 ரன்கள் மட்டுமே இழந்தது

இதனையடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 19.1 ஓவரில் 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது பெங்களூரு அணிக்கு 3வது வெற்றியாகும். விராத் கோஹ்லி இன்றைய ஆட்டத்தில் அபாரமாக விளையாடி 72 ரன்கள் அடித்தார். அதேபோல் படிக்கல் 63 ரன்கள் எடுத்தார். மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய சஹால் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இன்றைய வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. நான்கு போட்டிகள் விளையாடி ஒரே ஒரு தோல்வியை மட்டும் பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மும்பை, 3வது இடத்தில் டெல்லி மற்றும் 4வது இடத்தில் கொல்கத்தா உள்ளது. ஐதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் 5 முதல் 8 இடங்களில் உள்ளன.

From around the web