வருண் சக்கரவர்த்த் அபார பந்துவீச்சு: முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுக்கள்

 
வருண் சக்கரவர்த்த் அபார பந்துவீச்சு: முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுக்கள்

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஐபிஎல் தொடரின் 10வது போட்டி நடைபெற்று வருகிறது

 இன்றைய போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதனை அடுத்து படிக்கல் மற்றும் விராட் கோஹ்லி ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர் 

முதல் ஓவரை ஹர்பஜன் சிங் வீசிய நிலையில் அந்த ஓவரில் 5 ரன்களை எடுத்த பெங்களூர் அணி இரண்டாவது ஓவரை வருண் சக்கரவர்த்தி வீச வந்தார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி மற்றும் ராகுல் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்

varun

இதனை அடுத்து பெங்களூர் அணி தற்போது 2 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் என்ற நிலையில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்கள் குறித்த பெயர்கள் பின்வருமாறு:

கொல்கத்தா: ரானா, கில், ராகுல் திரிபாதி, இயான் மோர்கன், ஷகிப் அல் ஹூசைன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரு ரஸல், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன்சிங், பிரதிஷ் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி,

பெங்களூரு: விராத் கோஹ்லி, படிக்கல், ரஜத் படிதார், மாக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷாபஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், சிராஜ், சாஹல்,

From around the web