நாளை முதல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடக்கம்: பட்டம் வெல்வது யார்?

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி தள்ளி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த போட்டி செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. அதேபோல் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரத்தில் நாளை முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
 

நாளை முதல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடக்கம்: பட்டம் வெல்வது யார்?

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி தள்ளி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த போட்டி செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. அதேபோல் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரத்தில் நாளை முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடப்பு சாம்பியன் ரபெல் நடால் பாதுகாப்பு காரணமாக விளையாடவில்லை. அதேபோல் முன்னணி வீரரான சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர் காயம் காரணமாக விளையாடவில்லை

எனவே நடால், ரோஜர் பெடரர் ஆகிய இருவரும் இல்லாத அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் வெல்வது யார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அனேகமாக ஜோகோவிச் பட்டம் வெல்லலாம் என்றும் கூறப்படுகிறது

அதேபோல் பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் பினாகா விளையாடவில்லை. கரோலினா பிளிஸ்கோவா, சோபியா கெனின், செரீனா வில்லியம்ஸ் நமோமி ஒசாகா போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

38 வயதான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார் என்றும் அவர் இந்த போட்டியில் பட்டம் என்றால் 24 கிராண்ட்ஸ்லாம் வென்ற புதிய சாதனை ஏற்படுத்துவார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web