அமெரிக்க ஓபன் டென்னிஸ்- பியான்கா ஆன்ட்ரீஸ்கு வாழ்த்து சொன்ன செரினா!

‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டத்திற்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்குடன் மோதினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த செரீனா வில்லியம்ஸ் பட்டத்தினை வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆன்ட்ரீஸ்கு வெற்றிவாக்சி சூடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். துவக்கம் முதலே எதிர்பாராத வகையிலான ஆட்டத்தினைக் கொடுத்த ஆன்ட்ரீஸ்கு, செரீனாவின் இரண்டு சர்வீஸ்களை முறியடித்தது அதிர்ச்சியாகவே
 
அமெரிக்க ஓபன் டென்னிஸ்- பியான்கா ஆன்ட்ரீஸ்கு வாழ்த்து சொன்ன செரினா!

‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டத்திற்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்குடன் மோதினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- பியான்கா ஆன்ட்ரீஸ்கு வாழ்த்து சொன்ன செரினா!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த செரீனா வில்லியம்ஸ் பட்டத்தினை வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  ஆன்ட்ரீஸ்கு வெற்றிவாக்சி சூடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

துவக்கம் முதலே எதிர்பாராத வகையிலான ஆட்டத்தினைக் கொடுத்த ஆன்ட்ரீஸ்கு, செரீனாவின் இரண்டு சர்வீஸ்களை முறியடித்தது அதிர்ச்சியாகவே இருந்தது.

அதன்பின்னர் ஆன்ட்ரீஸ்கு  ஆதிக்கம் செலுத்துபடியாக ஆடினார், நிலைமையினை சமாளித்து செரீனா போராடி 5-5 என்ற கணக்கில் சமன் ஆனது.


அதன்பின்னர் ஆட்டம் விறுவிறுப்பானது, ஆன்ட்ரீஸ்கு மீண்டும் அதிரடியாக ஆடி 4 புள்ளிகளில் விட்டதை ஜெயிக்க போராடினார்.


இறுதியில் பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.

 முதல்முறையாக கனடாவைச் சார்ந்த ஒருவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்தது இவரே ஆவார்.


அமெரிக்க ஓபனில் இவர் ஆடுவது இதுவே முதல் முறையாகும், முதலாவது ஆண்டிலேயே பட்டம் வென்றது இரட்டிப்பு மகிழ்ச்சி எனறார் பியான்கா ஆன்ட்ரீஸ்கு.

முதல் பரிசாக பியான்கா ஆன்ட்ரீஸ்கு ரூ.27½ கோடியும், 2-வது இடத்தை பிடித்த செரீனா ரூ.13½ கோடியும் பரிசுத்தொகையாக பெற்றனர்.

செரினா இதுகுறித்து கூறியது, “பியான்கா மிகச் சிறப்பாக விளையாடி டஃப் காம்பிட்டிஷன் கொடுத்தார், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

From around the web