அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற ரபெல் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ரஷியா வீரர் டேனில் மெட்விடேடுடன் மோதினார். அதிரடியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல அதிரடியாக ஆடினர். துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ரபெல் நடால், அடுத்து சற்று தடுமாற சுதாரித்த மெட்விடேவ் அடுத்த 2 செட்களை போட்டார். ரபெல் நடால் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட்
 
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற ரபெல் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ரஷியா வீரர் டேனில் மெட்விடேடுடன்  மோதினார்.

அதிரடியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல அதிரடியாக ஆடினர். துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ரபெல் நடால், அடுத்து சற்று தடுமாற சுதாரித்த மெட்விடேவ் அடுத்த 2 செட்களை போட்டார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற ரபெல் நடால்


ரபெல் நடால் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் டேனில் மெட்விடேவை வீழ்த்தி, ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். மெட்விடேவும் நடாலுக்கு டஃப் காம்பிட்டிஷன் கொடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

போராடி கிடைத்ததாலோ என்னவோ, இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றதும் ரபெல் நடால் உணர்ச்சி பொங்க கதறி அழுதார். மைதானத்தில் உருண்டு உணர்ச்சியினைப் பகிர்ந்து கொண்டார்.

சாம்பியன் பட்டத்தை வென்ற ரபெல் நடாலுக்கு ரூ.27½ கோடியும், 2-வது இடத்தினைப் பிடித்த டேனில் மெட்விடேவ்க்கு ரூ.13½ கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

From around the web