யுஎஸ் ஓப்பன் டென்னிஸ்: இந்திய வீரர் அடுத்த சுற்றுக்கு தகுதி

அமெரிக்காவில் தற்போது யுஎஸ் ஓப்பன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் அமெரிக்காவின் பிராட்லியை 6-1, 6-3, 3-6 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். இதனையடுத்து அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

7 ஆண்டுக்கு பின் இந்திய வீரர் ஒருவர் யூஎஸ் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் 2வது சுற்றுக்கு முன்னேறிய வீரர் சுமித் நாகல் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற எண்கள் ஒற்றையர் போட்டியில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கிறிஸ்டியை 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார்.

அதேபோல் ஸ்பெயின் வீராங்கனை முருகுஜா, ஜப்பான் வீராங்கனை ஹிபினோவையும்,  ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்ட்ரா சீனியர் வீராங்கனை கிளைஸ்டர்ஸ் என்பவரை வீழ்த்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web