மும்பை வெற்றிக்கு உதவிய இரு வீரர்கள்: ராஜஸ்தான் கேப்டனுக்கு அபராதம்!

 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது என்பதும் இந்தப் போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

நேற்றைய போட்டியில் மும்பை 20 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 136 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததால், 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 

நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் மிக அபாரமாக 57 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார். அதில்  2 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ராஜஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்டுகளை மும்பை பந்து வீச்சாளர் பும்ரா வீழ்த்தினார். அவர் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது 

சூரியகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோரின் அபார ஆட்டத்தால் மும்பை அணி மிக எளிதில் வெற்றி  பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று மிகவும் தாமதமாக பந்துவீசிய ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் அவர்களுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web