அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்படும் சிஎஸ்கே வீரர்கள்: அதிர்ச்சி தகவல்

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து சிஎஸ்கே வீரர்களுக்கு சோதனை வந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சற்று முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியதாக வெளிவந்த தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிலையில் கடந்த சில மணிநேரங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
 
அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்படும் சிஎஸ்கே வீரர்கள்: அதிர்ச்சி தகவல்

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து சிஎஸ்கே வீரர்களுக்கு சோதனை வந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சற்று முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியதாக வெளிவந்த தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் கடந்த சில மணிநேரங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக தீபக் சஹாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து தற்போது வந்த தகவலின் படி சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு கொரோனா பாதிப்பு என்று கூறப்படுகிறது

எனவே அடுத்தடுத்து சிஎஸ்கே வீரர்கள் சொந்த காரணங்களுக்காகவும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டும் அணியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் அடுத்தடுத்து சிஎஸ்கே வீரர்களுக்கு சோதனை ஏற்பட்டு கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web