ஐபிஎல் களத்தில் குதிக்கும் இரண்டு அதிரடி வீரர்கள்: பரபரப்பு தகவல்

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும் முதல் சுற்று முடிவடைந்து இரண்டாம் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே 
இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இதுவரை விளையாடாமல் இருக்கும் இரண்டு முன்னணி வீரர்களில் விரைவில் களத்தில் இறங்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 

ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர். இதுவரை சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடிய போதிலும் இவருக்கு இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் விரைவில் பதில் இம்ரான் தாகிர் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இது குறித்து சென்னை அணியின் சிஇஓ பேட்டி அளித்தபோது இம்ரான் தாகிர் விரைவில் அணியில் இடம் பெறுவார் என்று தெரிவித்தார் 

அதேபோல் பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெயில் விரைவில் அணிக்காக விளையாட இருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். எனது ஆட்டத்தைப் பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள் இதுவரை நீங்கள் பொறுத்தது போதும், இனிமேலும் பொறுக்க வேண்டாம் இதோ வந்துவிட்டேன். விரைவில் அணியில் இடம் பெறுகிறேன்’ என கிறிஸ்கெயில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 

எனவே அடுத்து வரும் போட்டிகளில் சென்னை அணிக்காக இம்ரான் தாகிர், பஞ்சாப் அணிக்காக கிறிஸ் கெயில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web