தவானின் உருக்கமான வீடியோ….. ஆறுதல் சொன்ன பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி : இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அணியில் இருந்து காயத்தின் காரணமாக நீக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு ஆறுதல் கூறி உள்ளார். தவான் விலகவேண்டிய நிலை: உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் தன் இடது கை பெரு விரலில் காயமடைந்தார். அதனால் அடுத்த போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் காயம் விரைவில் குணமாக வேண்டும் என்று இந்திய அணியும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வந்தனர். எனினும், அவர் காயம் குணமாக
 

டெல்லி :

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அணியில் இருந்து காயத்தின் காரணமாக நீக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு ஆறுதல் கூறி உள்ளார்.

தவான் விலகவேண்டிய நிலை:

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் தன் இடது கை பெரு விரலில் காயமடைந்தார். அதனால்  அடுத்த போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் காயம் விரைவில் குணமாக வேண்டும் என்று இந்திய அணியும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

எனினும், அவர் காயம் குணமாக நீண்ட காலம் ஆகும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டதால் அவரை அணியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்தது பிசிசிஐ.

தவானின் உருக்கமான வீடியோ….. ஆறுதல் சொன்ன பிரதமர் நரேந்திர மோடி

தவானுக்கு பதில் ரிஷப் பண்ட்:

தவானுக்கு பதில் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். தவான் இல்லாதது இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவாகவே இருக்கும். ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி தவானின் இடத்தைப் பிடிக்கவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். தவான் இல்லாததால், அவருக்குப் பதில் ராகுல் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார். ராகுல் களமிறங்கிய மிடில் ஆர்டரில் விஜய் ஷங்கர் களமிறங்கி வருகிறார். தற்போது ரிஷப் பண்ட் உத்தேச அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், அவருக்கு களமிறங்க வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர்களுக்கு விடைகொடுத்த தவான்:

தவான் வீடியோவில் கூறியது, “நான் ஊருக்கு கிளம்ப வேண்டிய நேரம் இது. ஆனால், உலகக்கோப்பையில் இந்தியாவின் வெற்றிநடை தொடர்ந்து நடக்க வேண்டும். மேலும் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு மிக்க நன்றிகள்” என்று கூறினார்.

ஆறுதல் சொன்ன நரேந்திர மோடி:

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பின், தவான் வெளியிட்ட உருக்கமான அந்த வீடியோவிற்கு ட்விட்டரில் ஆறுதல் கூறியுள்ளார் பிரதமர் மோடி. அவரது பதிவில், “அன்புள்ள தவான், இந்திய அணி நீங்கள் இல்லாமல் வாடும் என்பதில் சந்தேகம் வேண்டாம். நீங்கள் விரைவில் குணமாகி, மீண்டும் விளையாட வருவீர்கள், நாட்டுக்காக நிறைய வெற்றிகளை பெற்று பெருமை சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

From around the web