டாஸ் வென்ற மும்பை பேட்டிங்: ராஜஸ்தான் தோல்வி அடைந்தால் சிஎஸ்கேவுக்கு வாய்ப்பு!

 

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இரண்டாவது போட்டி தொடங்க உள்ளது

மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இன்றைய போட்டியிலும் ரோஹித் சர்மா விளையாட வில்லை என்பதும் பொல்லார்டு தான் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த சுற்று செல்ல ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் பின்வருமாறு:

ராஜஸ்தான்: உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், பட்லர், பராக், ராகுல் திவேத்தியா, ஆர்ச்சர், ஸ்ரேயா கோபால், அங்கிட் ராஜ்புத், கார்த்திக் தியாகி

மும்பை இந்தியன்ஸ்: டீகாக், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திவாரி, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, பாட்டின்சன், ராகுல் சஹார், டிரெண்ட் போல்ட், பும்ரா,

From around the web