டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்: சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்!

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21ஆவது போட்டியான சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அபுதாபியில் நடைபெற உள்ளது 

இந்த போட்டியின் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். இதனை அடுத்து இன்னும் சற்று நேரத்தில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

சென்னை அணியை பொறுத்தவரை கடந்த ஐந்து போட்டிகளாக அணியில் எந்தவித மாற்றமும் இல்லாத நிலையில் இன்றைய போட்டியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லாவுக்கு பதிலாக கரண் சர்மா களத்தில் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடும் அதிருப்திக்கு உள்ளான கேதார் ஜாதவ் இன்றைய போட்டியிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியில் எந்தவித மாற்றமும் இன்றி கடந்த போட்டியில் விளையாடி அவர்களே இந்த போட்டியிலும் விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

இன்றைய போட்டியில் சென்னை அணி நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் நான்காவது செல்ல செல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web