டாஸ் வென்றது மும்பை: பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்யுமா டெல்லி?

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதலாவதாக நடைபெறும் 51வது போட்டி துபாயில் நடைபெறுகிறது. டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதும் இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து டெல்லி அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

மும்பையை பொருத்த வரை 16 புள்ளிகள் எடுத்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். டெல்லி 14 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தில் இருந்தாலும் இன்று வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியின் பிளே ஆப் சுற்றுக்கு உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

ஒருவேளை டெல்லி அணி தோற்றுவிட்டால் அடுத்த போட்டியில் அந்த அணி அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடதக்கது 

இன்றைய போட்டியில் இரு அணிகளும் விளையாடும் வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு:

மும்பை: இஷான் கிஷான், டீகாக், சூர்யகுமார் யாதவ், திவாரி, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, நாதன் கவுட்லர் நைல், ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், டிரெண்ட் போல்ட், பும்ரா

டெல்லி: ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹெட்மயர், ஸ்டோனிஸ், ஹர்ஷல் பட்டேல், டூபே, அஸ்வின், ரபடா, நார்ட்ஜே

From around the web