டோக்கியோ பாரா ஒலிம்பிக்: அவனிக்கு இரண்டாவது பதக்கம்!

 
avani lekara

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே தங்கம் வென்ற அவனி லெகாரா சற்றுமுன் வெண்கல பதக்கம் வென்றுள்ளதை அடுத்து பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் 

கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார் என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்று உள்ள அவனி லெகாரா, பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஆண்டில் 2 பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

From around the web