டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றி வாகை யாருக்கு?

2019 ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் ஜூலை 19 ஆம் தேதி தொடங்கியது. இறுதிச் சுற்றுக்குள் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய 4 அணிகள் கால் பதிக்கவுள்ளன. முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேஷன் சுற்றில் மதுரை பாந்தர்ஸ் அணி காஞ்சி வீரன்சை வீழ்த்தியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மதுரை
 
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றி வாகை யாருக்கு?

2019 ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் ஜூலை 19 ஆம் தேதி தொடங்கியது. இறுதிச் சுற்றுக்குள் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய 4 அணிகள் கால் பதிக்கவுள்ளன.முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேஷன் சுற்றில் மதுரை பாந்தர்ஸ் அணி காஞ்சி வீரன்சை வீழ்த்தியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மதுரை பாந்தர்சை வீழ்த்தியது.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றி வாகை யாருக்கு?

இறுதிப்போட்டியானது எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. இறுதிப் போட்டியை நோக்கி சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் களம் காண்கின்றன.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் துவ்க்க ஆட்டக்காரர்கள் கோபிநாத் (293 ரன்கள்), கங்கா ஸ்ரீதர் ராஜூ (225 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் அதிரடியாக ஆடி நம்பிக்கிய நட்சத்திரமாக உள்ளனர். பந்து வீச்சில் பெரியசாமி, ஹரிஷ்குமார், அலெக்சாண்டர், முருகன் அஸ்வின் ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடுகிறார்கள்.

கவுசிக் காந்தி, ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரின் திறமையான ஆட்டம் சேப்பாக் சூப்பர் கில்லீசிற்கு பக்க பலமாக இருக்கும்.


வெற்றி வாகையை நோக்கி நடக்கும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் கில்லீஸ் அணி 3 முறையும், திண்டுக்கல் அணி 2 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசு வழங்கப்படும்.


From around the web