மூன்று பந்துகளில் மூன்று ரன் - அவுட்: கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதுமை!

 

முதல் முறையாக கிரிக்கெட் வரலாற்றில் 3 பந்துகளில் 3 ரன் அவுட் நிகழ்வு நடந்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 

மகளிர் பிக்பேஷ் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று சிட்னியில் நடைபெற்ற பெர்த் மற்றும் மெல்போர்ன் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பெர்த் அணி முதலில் பேட்டிங் செய்தது 

run out

இந்த நிலையில் 19 ஓவர்கள் முடிவில் பெர்த் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இருபதாவது ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் மூன்றாவது பந்தில் ஒரு பவுண்டரி அந்த அணிக்கு கிடைத்தது. இதனை அடுத்து நான்காவது ஐந்தாவது ஆறாவது ஆகிய மூன்று பந்துகளில் 3 விக்கெட்டுகள் விழுந்தன என்பதும் இந்த மூன்று விக்கெட்டுகளும் ரன் அவுட் முறையில் அவுட் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

உலக கிரிக்கெட் வரலாற்றில் 3 பந்துகளில் 3 ரன் அவுட் என்பது இதுவரை நடந்திராத ஒரு நிகழ்வு என்றும் அந்த ஆச்சரிய நிகழ்வு இன்றைய போட்டியில் நடந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web