மூன்று அரை சதம், 3 ஆட்டநாயகன் விருது: தோனி செய்த மிகப்பெரிய தவறு!

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் அணியில் இணைக்கப்பட்ட பின்னர் கடந்த மூன்று போட்டிகளில் தனது ஸ்பார்க்கை நிரூபித்துள்ளார் 

மூன்று போட்டிகளிலும் அவர் அரை சதம் அடித்துள்ளார் என்பதும் சென்னை அணிக்கு தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இன்றைய போட்டியிலும் ருத்ராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து சென்னை அணியின் வெற்றிக்கு பேருதவியாக இருந்தார். சென்னை அணியில் ஆரம்பத்திலிருந்தே ருத்ராஜ் கெய்க்வாட்டை தோனி அணியில் சேர்த்திருந்தால் இன்று கிட்டத்தட்ட முதலிடத்தில் சென்னை அணி இருந்திருக்கும் என்றும் ருத்ராஜ் கெய்க்வாட்டை அணியில் சேர்க்காதது தோனி செய்த மிகப்பெரிய தவறு என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது என்பது ஆறுதலான ஒரு விஷயமாகும். பஞ்சாப் அணி கொடுத்த 154 என்ற இலக்கை 18.5 ஓவர்களிலேயே சென்னை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. ருத்ராஜ் 62 ரன்களும், அம்பத்தி ராயுடு 30 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தனர்.

From around the web