தோனி மகளுக்கு மிரட்டல்: சென்னை அணி தோல்வி எதிரொலியா?

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் சமீபத்தில் சென்னை அணி, கொல்கத்தா அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வி அடைந்தது சென்னை அணியின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது 

இந்த நிலையில் சென்னை அணி தொடர் தோல்வியை பெற்று வருவதை அடுத்து தோனியின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தோனியின் மனைவியான சாக்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் பகுதிகளில் தோனியின் ஐந்து வயது மகள் ஷிவாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒருசில மோசமான பதிவுகளும் பதிவிடப்பட்டுள்ளது என்பதும் அந்தப் பதிவுகளின் ஸ்க்ரீன்ஷாட் டுவிட்டரில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த பதிவுகளை பார்த்து சென்னை அணியின் உண்மையான ரசிகர்கள் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். சென்னை அணியை நேசிக்கும் யாரும் கண்டிப்பாக இதனை செய்திருக்க மாட்டார்கள் என்றும், இதனை செய்தவர்கள் நிச்சயமாக சமூக விரோதிகளாக இருப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர் 

ஏற்கனவே மோசமாக விளையாடிய கிரிக்கெட் வீரரின் குடும்பங்களுக்கு கொலை மிரட்டல் உள்பட பல்வேறு விதமான மிரட்டல்கள் ஏற்பட்டு உள்ளது என்பதும் சமீபத்தில்கூட விராட் கோலியின் மனைவி அனுஷ்காவுக்கு இதுபோன்ற மோசமான விமர்சனங்கள் எழுந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web