50 போட்டிகள் முடிந்தும் முடிவு தெரியாத ஒரே ஐபிஎல் இதுதான்!

 

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி ஒரு மாதம் ஆகி விட்ட நிலையில் நேற்றுடன் 50 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த 50 போட்டிகளின் முடிவுகளையும் பார்க்கும்போது மும்பை அணி மட்டுமே இதுவரை அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது என்பதும் சென்னை அணி மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பதும் உறுதியாகத் தெரிந்து உள்ளது

மற்றபடி இரண்டாவது மூன்றாவது நான்காவது இடங்களில் எந்த அணி என்பது மீதமுள்ள போட்டிகளின் முடிவுகளில் தான் தீர்மானிக்கப்படும். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 50 போட்டிகள் முடிவடைந்து இன்னும் 6 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையிலும் பிளே ஆப் சுற்றில் தகுதி வரும் 3 அணிகள் எது என்பது இதுவரை இன்னும் தெரியவில்லை

பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் ஆகிய மூன்று அணிகள் 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் பெங்களூரு, டில்லி அணிகள் தலா 14 புள்ளிகளும், ஐதராபாத் 10 புள்ளிகளும் பெற்றுள்ளன. அதேபோல் பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய அணிகள் தலா 13 போட்டிகளில் விளையாடி மூன்று அணிகளும் 12 புள்ளிகள் பெற்றுள்ளன்.

எனவே இனி வரும் ஆறு போட்டிகளின் முடிவுகள் மற்றும் அணிகளின் ரன்ரேட் அடிப்படையில்தான் அடுத்த மூன்று இடத்தை பிடிக்க போவது எந்த அணிகள் என்பது தெரியவரும். 50 போட்டிகள் முடிந்த பின்னரும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை என்று தெரியாத ஐபிஎல் இது ஒன்றுதான் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web