கிரிக்கெட் ஸ்கோர் போர்டில் பெரிய எண்ட்ரி இதுதான்: ஹர்ஷா போக்லே தெரிவித்த தகவல்

 

பொதுவாக கிரிக்கெட் ஸ்கோர் போர்டில் ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகும்போது பேட்டிங் செய்தவரின் பெயர், அவரை அவுட்டாக்கிய பந்துவீச்சாளர், கேட்ச் பிடித்தவரின் பெயர்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த மூன்று நபர்களின் பெயர்கள் மிக நீளமாக இருந்த உலக ரெக்கார்டு குறித்த தகவலை ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். நேற்றைய சென்னை மற்றும் கொல்கத்தா அணியின் போட்டியின்போது வர்ணனை செய்த ஹர்ஷா போக்லே இந்த அபூர்வ தகவலை தெரிவித்துள்ளார் 

கடந்த 1990ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆந்திரா மற்றும் கேரள மாநில அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி டிராபியில் தான் இந்த அதிசய நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார் 

அந்த போட்டியில் பேட்டிங் சாமுண்டேஸ்வர்நாத் என்பவரை அனந்தபத்மநாபன் என்பவர் பந்துவீசி பாலசுப்பிரமணியம் என்பவர் கேட்ச் பிடித்ததாகவும், இவர்கள் மூவர் பெயர்களும் ஸ்கோர் போர்டில் குறிப்பிட்டபோது மிக நீளமாக இருந்ததாகவும் இதுதான் உலகிலேயே மிக நீளமான ஸ்கோர் போர்டில் வந்த பெயர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது

From around the web