இதுதான் சேஸ் பாத்துக்கோங்க தோனி: நெட்டிசன்களின் பதிவுகள்

 

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போட்டியில் 7 போட்டிகளிலும் சேஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. ஒரு போட்டியில் சாம் கர்ரன் அதிரடியாக அடித்ததாலும் இன்னொரு போட்டியில் வாட்சன் மற்றும் டீபிளஸ்சிஸ் அடித்ததாலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, முக்கிய ஐந்து விக்கெட்டுகள் விழுந்து விட்டாலும் ராகுல் திவெட்டியா மற்றும் பராக் ஆகிய இருவர் மிக அருமையாக விளையாடி வெற்றி பெற செய்தனர் 

ராகுல் திவெட்டியா தான் சந்தித்த முதல் 14 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். ஆனால் அதன் பின்னர் சந்தித்த 14 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரியான் பராக் தான் சந்தித்த முதல் 13 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அதன் பிறகு அவர் சந்தித்த 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இவர்கள் இருவரும் இணைந்து கடைசியாக 27 பந்துகளில் 67 ரன்கள் எடுத்ததே ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சேஸ் என்றால் இதுதான் என்பதை தோனி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இளைஞர்களை களம் இறங்கினால் மட்டுமே இது சாத்தியம் என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்

From around the web