ரொம்ப டார்ச்சர் செய்கிறார்கள், இனிமேல் என்னால் விளையாட முடியாது: பிரபல கிரிக்கெட் வீரர்

 

மனரீதியாக பாதிக்கப்பட்டதால் இனிமேல் என்னால் விளையாட முடியாது அதனால் ஓய்வு பெறுகிறேன் என சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தனது ஓய்வை பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் அறிவித்துள்ளார் 

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் பாகிஸ்தான் அணிக்கு மிகவும் பலமான ஒரு வீரராக இருந்தார். இவரது வேகப்பந்து வீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் முகமது அமீர் திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 

amir1

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: நான் கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டிய நேரம் இது தான் என்று கருதுகிறேன். ஏனென்றால் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் என்னை மனரீதியாக டார்ச்சர் செய்ததால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை 

பல்வேறு காரணங்களுக்காக நான் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் இருந்து இருந்தேன். தற்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கீழ் என்னால் விளையாட முடியாது. நான் அணிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை சரியாக செய்தேன். ஆனால் எனது பங்கு வீச்சை அதிகாரிகள் குறை கூறிக் கொண்டே இருந்தார்கள். அதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

From around the web