வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தினால் அரையிறுதி வாய்ப்பு… சவாலாக களமிறங்கும் இந்தியா

மான்செஸ்டர்: 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மான்செஸ்டரில் இன்று ஜூன் 27 ஆம் தேதி நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. தோல்வி என்றால் எங்களுக்கு என்னவென்று தெரியாது: இந்த லீக் தொடரில் இதுவரை ஆடிய ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு ஆட்டம் மட்டும் ரத்து செய்யப்பட்டது. 9 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ள
 

மான்செஸ்டர்:

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

மான்செஸ்டரில் இன்று ஜூன் 27 ஆம் தேதி நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது.

தோல்வி என்றால் எங்களுக்கு என்னவென்று தெரியாது:

இந்த லீக் தொடரில் இதுவரை ஆடிய ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது, நியூசிலாந்துக்கு எதிரான  ஒரு ஆட்டம் மட்டும் ரத்து செய்யப்பட்டது.

9 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ள அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பினைப் பெற்றுவிடும்.

தடுமாறிய இந்தியா:

சாம்பியன் அணிகளை அதிரடித்த இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அலட்சியான ஆட்ட த்தை  வெளிப்படுத்தியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெறும் 224 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி எப்படியோ 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தோல்வியில் இருந்து நூலிழையில் தப்பியது.

தோனிக்கு கவனம் தேவை:

இந்த ஆட்டத்தில் தோனியின் பேட்டிங் 28 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பலாக இருந்தது, ரசிகர்கள் இதனால் பொறுமையிழந்தனர். முன்னால் கிரிக்கெட் வீரர் சச்சின் கூட தோனியின் ஆட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து அணியை தூக்கி நிறுத்தவேண்டியது தோனியின் கடமையாகும், அவ்வாறே அவருடைய ஆட்டம் இருத்தல் வேண்டும்.

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தினால் அரையிறுதி வாய்ப்பு… சவாலாக களமிறங்கும் இந்தியா

என்ன செய்யப்போகிறது வெஸ்ட் இண்டீஸ்:

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானைவீழ்த்தினாலும், அதன் பின்னர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டங்களில் வரிசையாக தோல்வியை சந்தித்த து.

6 ஆட்டத்தில் வெறும் 3 புள்ளி மட்டுமே எடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு என்பது மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் அதிக ஸ்கோர் எடுத்து வெற்றி பெற்றால் மட்டுமே கிடைக்கும்.

ஒருங்கிணைப்பு அவசியம்:

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ரன்னில் தோல்வியடைந்தது. பலம் பொருந்திய நியுசிலாந்திடம் குறைந்த ர ன் வித்தியாசத்திலேயே தோல்வியுற்ற து. கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், பிராத்வெய்ட், ஷாய் ஹோப் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக உள்ளனர். பந்து வீச்சில் ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ்  சிறப்பாக ஆடுவார்கள்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் பட்டியல்:

இந்தியா:

லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

வெஸ்ட் இண்டீஸ்:

கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், இவின் லீவிஸ் அல்லது சுனில் அம்ப்ரிஸ், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், கெமார் ரோச், காட்ரெல், ஒஷானே தாமஸ்.

.�Z�>

From around the web