தவான் இழப்பினால் இந்திய அணியில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை… மைக்கேல் ஹசி

தவான் விலகல்: உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் தன் இடது கை பெரு விரலில் காயமடைந்தார். அதனால் அடுத்த போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் காயம் விரைவில் குணமாக வேண்டும் என்று இந்திய அணியும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வந்தனர். எனினும், அவர் காயம் குணமாக நீண்டா காலம் ஆகும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டதால் அவரை அணியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்தது பிசிசிஐ. கேன்பரா: தவானின் இழப்பினால் இந்திய அணியில்
 
தவான் இழப்பினால் இந்திய அணியில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை… மைக்கேல் ஹசி

தவான் விலகல்:

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் தன் இடது கை பெரு விரலில் காயமடைந்தார். அதனால்  அடுத்த போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் காயம் விரைவில் குணமாக வேண்டும் என்று இந்திய அணியும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

எனினும், அவர் காயம் குணமாக நீண்டா காலம் ஆகும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டதால் அவரை அணியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்தது பிசிசிஐ.

கேன்பரா:

தவானின் இழப்பினால் இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை, மற்ற வீரர்கள் சிறப்பாகவே விளையாடுகின்றனர் என்று ஆஸ்திரேலிய அணி வீரர் மைக்கேல் ஹசி கூறியுள்ளார்.

தவானுக்கு பதில் ரிஷப் பண்ட்:

தவானுக்கு பதில் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். தவான் இல்லாதது இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவாகவே இருக்கும். ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி தவானின் இடத்தைப் பிடிக்கவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். தவான் இல்லாததால், அவருக்குப் பதில் ராகுல் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார். ராகுல் களமிறங்கிய மிடில் ஆர்டரில் விஜய் ஷங்கர் களமிறங்கி வருகிறார். தற்போது ரிஷப் பண்ட் உத்தேச அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், அவருக்கு களமிறங்க வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

தவான் இழப்பினால்  இந்திய அணியில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை… மைக்கேல் ஹசி

மைக்கேல் ஹசி இப்படியா சொன்னார்:

தவானின் நீக்கம் குறித்து ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி கூறியதாவது, “தவானுக்கு ஏற்பட்ட காயத்தின் காரணத்தினால் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.

தவான் இருந்திருந்தால் தொடக்க ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். அவர் இல்லாதது, இந்திய அணியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. தவானுக்கு பதிலாக விளையாடும் ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார்.

எனவே ரோகித் சர்மாவுடன் ராகுல் ஆடுவது எந்த விதத்திலும் பாதிக்காது. மேலும் மிடில் வரிசையிலும் கோலி, தோனி மற்றும் பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடுகின்றனர். இதனால் இந்திய அணியும் இந்திய ரசிகர்களும் கவலை கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

From around the web