ராணாவின் அதிரடியால் மிகப்பெரிய இலக்கு: சிஎஸ்கே பேட்ஸ்மேன் என்ன செய்ய போகிறார்கள்?

 

இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான 49வது ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது 

ஆரம்பம் முதலே அடித்து ஆடி வந்த கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடியது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரரான ராணா பவுண்டரிகளையும் சிக்சர்களையும் வெளுத்து வாங்கினார். அவர் 10 பவுண்டரிகளையும் 4 சிக்சர்களை அடித்து 87 ரன்கள் இருந்தபோது அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்ராஜ், அம்பத்தி ராயுடு, வாட்சன், தோனி, ஜெகதீசன், சாம் கர்ரன் ஆகிய ஏழு பேட்ஸ்மேன்கள் உள்ளதால் இந்த இலக்கை எளிதில் எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web