6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி திணறல்

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி தற்போது மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 195 ரன்கள் எடுத்தது

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சற்று முன் வரை 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும் ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவின் ஸ்கோரை விட 9 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

australia

ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின், உமேஷ் யாதவ், சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது க்ரீன் மற்றும் கம்மின்ஸ் விளையாடி வருகின்றனர் என்பதும் இன்னும் சில மணி நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web