டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியை அடித்து துவைத்த அயர்லாந்து அணி

அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூலை 24) தொடங்கிய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஒருநாள் தொடரில் உலக சாம்பியனான இங்கிலாந்து அணி அயர்லாந்து அணியை புரட்டி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயர்லாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. உலகக்கோப்பையில் வென்றபின், அணியில்
 

அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூலை 24) தொடங்கிய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஒருநாள் தொடரில்  உலக சாம்பியனான இங்கிலாந்து அணி அயர்லாந்து அணியை புரட்டி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயர்லாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியை அடித்து துவைத்த அயர்லாந்து அணி

உலகக்கோப்பையில் வென்றபின், அணியில் யாரும் நல்ல ஃபார்மில் இல்லை என்கின்றனர் ரசிகர்கள்.

அயர்லாந்து அணியின் டிம் முர்தாக் வேகப்பந்து வீச்சில் தாக்கு பிடிக்க முடியாத இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். 

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ டேன்லி 23 ரன்கள் எடுத்து இருந்தார். இங்கிலாந்து அணியில் 8 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். முதல் இன்னிங்சில் 23.4 ஓவர்கள் மட்டும் தாக்குப் பிடித்த இங்கிலாந்து அணி 85 ரன்களில் ஆட்டமிழந்தது.

உலகக்கோப்பையை வென்ற அணிக்கு வந்த சோதனை பார்த்தீங்களா? என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

From around the web