தல தோனியின் வித்தியாசமான அணுகுமுறை: சிஎஸ்கே அபார வெற்றி 

 

இன்று நடைபெற்ற ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தல தோனி ஆரம்பத்திலிருந்தே வித்தியாசமான முடிவுகளை எடுத்தார்

டாஸ் வென்று முதல் முறையாக பேட்டிங் எடுத்த தோனி அதன் பின்னர் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக சாம் கர்ரனை இறக்கிவிட்டார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. சாம் கர்ரன் 21 பந்துகளில் 3 ரன்கள் அதிரடியாக எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்ததார். வாட்ஸன் அபாரமாக விளையாடி 42 ரன்களும், ராயுடு 41 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் 7 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கிய தல தோனி முதல் 4 ஓவரை தீபக் சஹாருக்கு கொடுத்தது பெரும் ஆச்சரியத்தை அளித்தது 

இந்த நிலையில் தல தோனியின் அடுத்தடுத்த வித்தியாசமான முடிவுகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்: 

சென்னை அணி: 167/6

ஐதராபாத் அணி: 147/8 

From around the web