டி20 உலகக்கோப்பை: கிரிக்கெட் ரசிகர்கள் குஷி

 
T20 world cup

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என செய்திகள் வெளியானதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்

2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 14 நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது

From around the web