பொளந்து கட்டிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான்: டெல்லிக்கு இமாலய இலக்கு!

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது குவாலிபயர் போட்டியில் ரோகித் சர்மா, பொல்லார்டு ஆகிய இரண்டு முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் பொளந்து கட்டியதால் மும்பை அணி 200 ரன்கள் எடுத்துள்ளது

இன்றைய போட்டியில் அதிரடியாக தொடக்க ஆட்டக்காரர் டிகாக் 25 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். அதன்பின் சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 51 ஆண்களும் இஷான் கிஷான் 30 பந்துகளில் 55 ரன்களும் எடுத்து கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடினர்.

குறிப்பாக இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய் இருவரும் டெல்லி பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்ததால், மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் டெல்லி அணி 201 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணியில் உள்ள பிபிஷா, தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ் ஆகிய பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இருந்தாலும் 201 என்ற இலக்கை எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

முன்னதாக இந்த போட்டியில் மிக அபாரமாக பந்துவீசிய அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web