இந்திய ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! … மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஜூலை 2 ஆம் தேதி இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. வங்கதேசம் அணி இந்த முறை பலம் பொருந்திய அணியாக இருக்கிறது. அரை இறுதிக்காக இன்று இந்தியா- வங்காளதேச அணிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. புவனேஷ்வர்குமாரின் காயம்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பவுலிங்கின் போது புவனேஷ்வர்குமாருக்கு காயம் ஏற்பட்டது. பிட்சில் வழுக்கியதால் 4 பந்துகள்
 


லண்டன்:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஜூலை 2 ஆம் தேதி இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. வங்கதேசம் அணி இந்த முறை பலம் பொருந்திய அணியாக இருக்கிறது. அரை இறுதிக்காக இன்று இந்தியா- வங்காளதேச அணிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

புவனேஷ்வர்குமாரின் காயம்:

 பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பவுலிங்கின் போது புவனேஷ்வர்குமாருக்கு காயம் ஏற்பட்டது. பிட்சில் வழுக்கியதால் 4 பந்துகள் போட்ட அவர் பாதியில் பெவிலியன் திரும்பினார். அவர் சிகிச்சையில் இருந்து வந்தார். 

இவருக்கு மாற்றாக ஷமி:

இந்திய ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! … மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்

இதனால் கடந்த மூன்று போட்டிகளில் புவனேஷ்வர்குமார் விளையாடவில்லை. இவருக்கு பதிலாக இந்திய அணியில் ஷமி விளையாடினார். ஷமி நன்றாகவே ஆடியதுடன், மூன்று போட்டிகளில் மட்டும் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இன்ப அதிச்சி:

வங்கதேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று லீக் ஆட்டம் நடக்க உள்ள நிலையில், நேற்று மருத்துவர்கள் புவனேஷ்குமாரை பரிசோதித்துவிட்டு விளையாட அனுமதித்து இருக்கிறார்கள். இந்திய அணியின் தேர்வு வாரியமும் விளையாட அனுமதி வழங்கிவிட்டது.

 இதனால் அணியின் சக வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். புவனேஷ்வர்குமார் அணிக்கு வந்தால் அணியின் பவுலிங் மேலும் வலுவாக இருக்கும் பெறும் என்று ரசிகர்களும் குதுகலத்தில் உள்ளனர். 
 

இந்திய அணியில் நேற்றுதான் விஜய் சங்கர் காயம் காரணமாக நீக்கப்பட்டார். அவருக்கு பதில் வலுவான மயங்க் அகர்வால் எடுக்கப்பட உள்ளார். இந்தப் புது மாற்றங்களால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 


From around the web