என்ன ஆச்சு சுரேஷ் ரெய்னாவுக்கு? ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதால் பரபரப்பு

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் துபாய் சென்றது என்பது தெரிந்ததே. அவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு விரைவில் பயிற்சி மேற்கொள்ள இருக்கும் நிலையில் திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, திடீரென ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி, துபாயில் இருந்து இந்தியா திரும்பி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர்
 

என்ன ஆச்சு சுரேஷ் ரெய்னாவுக்கு? ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதால் பரபரப்பு

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் துபாய் சென்றது என்பது தெரிந்ததே. அவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு விரைவில் பயிற்சி மேற்கொள்ள இருக்கும் நிலையில் திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, திடீரென ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி, துபாயில் இருந்து இந்தியா திரும்பி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அவர் தனது சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளதாகவும் இதனை அடுத்து சற்று முன் அவர் இந்தியா திரும்பி விட்டதாகவும் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவர் உள்பட 13 பேர் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என சோதனையில் தெரிய வந்ததாக வெளி வந்துள்ள தகவலை அடுத்து தற்போது சுரேஷ் ரெய்னா போட்டியில் இருந்து விலகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web